Month: February 2012

இலவச சட்ட சேவை முகாம்

Posted on Updated on

மகளிர்  அபிவிருத்தி நிலையமும், மனித உரிமைகளுக்கும் அபிவருத்திக்குமான நிலையமும் இணைந்து இலவச சட்ட   நிகழ்வு ஒன்றினை பல்வேறுபட்ட பிரச்சினைகட்கு சட்ட ரீதியில் தீர்வு காணும் முகமாக ஆலோசனைகள் வழங்கும் நோக்குடன் ஒழுங்கு செய்து நடத்தியுள்ளது. இந்நிகழ்வு 2011 ஒக் 15ம் திகதி தெல்லிப்பளை, கட்டுவன் ஐயனார் கோவில் மண்டபத்திலும், 16ம் திகதி சித்தங்கேணி, பண்ணாகம் அம்பாள் கலை மன்றத்திலும் இடம்பெற்றது. பிரபல சட்டத்ரணிகள் மக்களுக்கு ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

 • காணாமற் போனோர்
 • வன்முறை தொடர்பான வழக்குகள்
 • காணிப்பதிவுகள்
 • சிறுவர், பெண்கள் சட்ட ஆலோசனைகள்
 • மரண சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை பெறல் வழிமுறைகள்
 • மற்றும் இலவச சட்ட சேவைகளுக்கான ஆலோசகைள்.
என்பன இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.
Advertisements

Dialogues on promoting Women Participation in Politics

Posted on

The Center for Women and Development conducted a two days program to the Representations who have contested in the Local Government Election and those who are activity encased in Political activities. The dialogues, Promoted discussion among the group of Wo0men to have an ettective Campaign the Election days, encouraging the Women Candidates. Ms.Saroja Sivachandran executive Director, CWD guided the dialogues and   Ms.Kiruthika, Lecturer from the University of Jaffna.(Media), Prof.V.Sivanathan Lecture, University of Jaffna. Too joined as resource in this program.
This program was held in Jaffna on 17th and 21st of Oct 2011.

Widows Details 2010

Posted on


Northern Province District Based 2010 (Total 39’042)
 • Jaffna 26,340
 • Kilinochchi 5,403
 • Vavunuya 4,303
 • Mannar 2,996
Nnumber of widows in Jaffna District (Total 26,340)
 • Due to war lost their husbands 1,591
 • Due accident lost their husbands 930
 • Due to Disease lost their husbands 17,192
 • Due to Disaster lost their husbands 4,030
 • Due to suicide 1,042
 • Due to other reasons lost their husbands
 • (Missing and disappeared women Headed families) 1,555
Jaffna District Widows by Age
 • Under 20 > 38
 • Between 21 – 30 > 286
 • Between 31 – 40 > 2,254
 • Between 41 – 50 > 4,003
 • Between 51 – 60 > 6,476
 • Over 60 > 12,743
Number of widows in Mannar District (Total 2,996)
 • Due war lost their husbands 270
 • Due to natural Death lost their husbands 2,586
 • Missing 140
Categorized based on the survey done by the centre for women and development in 2010

சர்வதேச சிறுவர் தினம்

Posted on

முன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா – 2011

யாழ்ப்பாணத்தில் நாவாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள புனித நீக்கிலார் முன்பள்ளி நிறார்களுடைய விழையாட்டு விழா 08.07.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுவாக வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரினால் குடும்பங்கள் சின்னாபின்னமாகி, பெற்பெற்றோரை இழந்து அகதிகளாக, அனாதைகளாக மீண்டும் வாழ்வோம் என்ற மன உறுதியோடு எமது தாயகத்தில் நிறைவான நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள்.
நடத்தியவர்கள் புனித நீக்கிலார் முன்பள்ளி சிறார்கள். மக்கள் மனதில் எவ்வித பாதிப்புக்கள் இருந்த போதிலும் இவ்வாறான மனதுக்கு மகிழ்வட்டும் நிகழ்வினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் மட்டுமல்ல பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். த்றபோதெல்லாம் சிறுவர் துஸ்பிரயோகம், பாடசாலையிலிருந்து சிறுவர்கள் இடைவிலகல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் பற்றி அதிகமாக பேசுகின்றோமே தவிர சிறுவர்களை மகிழ்விற்பதற்கான நிகழ்வை நடத்துவதைப் பற்றி பேசுவதை மறந்து விடுகின்றோம்.
நிறுவர்களுடைய மகிழ்வான வாழ்க்கை பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவர்களின் மனங்களைக் குளிர வைக்கும் மகிழ்களங்களை அமைத்துக் கொடுக்கவும் பல விளையாட்டு விழாக்கள், கலை நிகழ்வுகள், சிறுவர் கொண்டாட்டங்கள், வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி அவர்களின் மனங்களை மகிழ்விக்கக் கூடிய வகையில் உற்சாகப்படுத்தவும், உத்வேகத்துடன் செயலாற்றும் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
சிறுவர்களின் வாழ்வை மகிழ்ச்சியான களமாக மாற்றியமைப்பது நம் எல்லோரினதும் கடமையாகும். அவர்களுக்கான மகிழ்களத்தை அமைத்துக் கொடுப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவியாகும். இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்களாக மாற்றிமைக்கக் கூடிய சக்தியாக நாம் எல்லோரும் முன்னின்று ஓர் உந்து கோலாகச் செயற்பட வேண்டுமென  இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக் கலந்து கொண்ட மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பார் சரோஜா சிவசந்திரன் தெரிவித்தார்.

பெண்கள் உரிமைக்குத் தேவை அமைதி

Posted on

சரோஜா சிவசந்திரன்
போர்ப் பண்பாட்டிலிருந்து ஓர் அமைதிப் பண்பாட்டுக்கு மாற வேண்டிய அவசர தேவை இன்றுள்ளது. மனித மேம்பாடு, அமைதி, மக்களாட்சி ஆகிய மூ ன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்த, ஒன்றை உறுதிப்படுத்தும் கூறுகள். இவையின்றி மனித மேம்பாடு குறிப்பாக பெண்கள் மேம்பாடு என்பது இன்று கேள்விக் குறியாகவே உள்ளது. உலகெங்கும் போர் நடைபெற்று, ஏன் அமைதி காணப்பட்ட நாடுகளில் கூட பெண்கள் சொல்லொணா துயரங்களும், துன்பங்களும் தொடர்வது அறியப்படுகின்றது. அதிகரித்துவரும் வன்முறைப் போக்குகள் பெண்களின் முன்னேற்றத்தின் முக்கிய தடைக் கற்களாக, அவர்கள் உடல், உளநல மேம்பாட்டைத் தாக்குகின்றன. உலகெங்கும் வன்முறை பற்றி, அமைதிப் பேச்சுக்கள் பற்றி ஆராய்ச்சிகள், அடுக்கடுக்காக நூல்கள், கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இவைகள் யாருக்கு உதவப் போகின்றன? வன்முறைகளுக்கு அதிகம் உள்ளாகும் பெண்களின் பொறுப்பான பங்கு இங்கு எங்கே உள்ளது?
வன்முறைகளுக்கு அஞ்சி, ஒதுங்கி ஒளித்து வாழும் பெண்களின் மனப்பாங்கில் தீவிர மாற்றங்கள் தேவை, வன்முறைகள் நடந்த பின்பு போர்க் கொடி தூக்குவதில் மட்டுமே எமது சமுதாயம்  கவனம் செலுத்துகின்றது. இவற்றை வராது தடுத்து, வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பெண்கள் இன்று தயாராக இல்லை. எமது பிரச்சினைகளை முன்வைத்து எத்தனை போராட்டங்கள் எமது மண்ணில் நடந்துள்ளன?
நடக்கும் வன்முறைகளை எப்படியாவது சமூகத்தின் பார்வையில் எட்டாது மறைத்து, ஒளித்து விடவேண்டும் என்று பாடுபடுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் எமக்கு உரிமைகள் எங்கே?
அல்லல்படும் சமுதாயத்தில் வன்முறைகளைக் கைவிடுவதற்கு சமுதாயம் முழுவதும் ஒரு கடமைப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இவை அரசாங்கப் பொறுப்புக்கள் அல்ல மாறாக நாட்டின் பொறுப்புக்கள் ஆகும்.
ஒரு போர்ப் பண்பாட்டிலிருந்து ஓர் அமைதிப் பண்பாட்டிற்கு மாறுவது என்பது கடினமான செயல். இதற்கு நாட்டில் ஒவ்வொருவரது ஒத்துழைப்பும் தேவை. பெண்கள் அனுபவித்து வரும் துயரங்கள், வன்முறைகளில் ஆண்களுக்குப் பங்கில்லை என்று தட்டிக் கழித்து விட முடியாது. ஒரு மாற்றம் தேவையாயின் அம்மாற்றத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும் தேவை.
பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான நிறுவனங்கள் கூட படிப்படியாக அமைதிக்கான, அமைதியை நிலைநாட்டும் நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும். குழப்பங்கள், பூசல்கள் வருமுன் தடுப்பது சாலச்சிறந்தது. இந்தத் தடுப்பத் தான் நமக்கு வெற்றியை அளிப்பது. இந்த வெற்றியிலேயே மனிதனின் தனித்தன்மையான அறிவுத் திறன்கள் வெளிப்படுகின்றன. அளவு கோலும் அதுவே.
நாம் செய்தி ஊடகங்களில் வாசிக்கும், கேட்கும் நிகழ்வுகள் கூட இன்று ஆரோக்கியமானதாக இல்லை. அமைதி, ஆரோக்கியம் இயல்பு நிலை ஆகியவை செய்திகள் ஆவதில்லை. கண்ணுக்குப் புலனாகாத இந்தச் செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க முயலு வேண்டும்.
துயரத்தை எதிர் கொண்டு போரினால்க் கழைப்படைந்த மக்கள் இன்று அமைதியில் நாட்டம்  கொண்டுள்ளனர். போரில் ஈடுபட்டுள்ள பகுதியினர் கூட அமைதி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். உலக நாடுகளில குறிப்பாக தென்னாபிரிக்கா, நமீபியா, அங்கோலா, எல்சல்வடோர், மொஸாம்பிக் போன்ற நாடுகளில் ஏற்கப்பட்ட அமைதி உடன்படிக்கைகள் எமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ள போதிலும், போரின் காரணமாக உயிரிழந்த, பலியான உயிர்கள், சீர் குலைந்த குடு்ம்பத்தினர், மானபங்கப்படுத்தப்பட்ட பெண்கள், அகதி வாழ்வில் அல்லலுறும் பெண்கள் இவர்களை நிகைக்கும் போது அமைதியில் ஆழமான உயர்வுகள் சூழ்ந்து விடுவது உண்மை. இச் சிந்தனைகட்கு நாம் புத்துயிர் அளிக்கப் பாடுபட வேண்டியது இன்றைய தேவையாகும். இன்று பெண்கள் அமைப்புக்கள் விழிப்புடன் செயற்படுவதற்கான நேரம் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள், சிறுமிகள் எண்ணிக்கைகளைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. பட்டினியால் வாழும் குடும்பங்களுக்காக நம் மனம் கொதித்தால் மட்டும் போதாது. நாம் ஒவ்வொருவரும் இயன்ற அளவிற்கு செயற்பட வேண்டும். சமூகம் பெண்களுக்கான மேம்பாட்டு முன்மாதிரிகளையும், வாழ்க்கை முன்மாதிரிகளையும் திணிப்பதை நிறுத்த வேண்டும். இத்திணிப்புக்கள் வாழ்விற்கான உரிமைகளைத் தூக்கி எறிந்து விடுகின்றனர். உலகமயமாதல் மூலம் நாடுகளின் தனித்துவம் பேணப்படுவதில் ஏற்படக் கூடிய ஓர் சீர்மையாக்க அபாயத்தைத் தவிர்த்துக் கொள்வதில் பல யுக்திகளை நாடுகள் பேண முயல்கின்றன. இதற்காக சமய பண்பாட்டு, தேசிய கொள்கைகளிடம் அடைக்கலம் தேட முயல்கின்றன. இதனால் ஏற்படும் உட்பூசல்களைப் எதிர் நோக்கும் நாம், மாறிவரும் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு செயற்படுவதில் ஆர்வம் காட்டுவது தேவையாகின்றது.
மனித உரிமைகளை இப் புதிய நூற்றாண்டின் விடியலில் நாம் நடைமுறையில் செயற்படுத்த வேண்டிய சூழ்நிலையை வலுப்படுத்துவதற்கு ஆவன செய்ய முயலவேண்டும்.  மனித உரிமைகள், பெண்கள் உரிமைகளுக்கு எந்த நிறுவனமும், தனி மனிதரும் தனி உரிமை கொண்டாட முடியாது. இது பற்றிய மற்றவர்களின் தகுதிகளைக் கெடுக்கவும் முடியாது. அவற்றை அரும்பாடு பட்டுப் பெற வேண்டும். நாள்தோறும் புதுப்பிக்க வேண்டும். இச் செயற்பாடுகளின் புதிய அணுகுமுறையில் பெண்கள் அமைதியான வாழ்வும் உறுதிப்படுத்தப் படுகின்றன. அமைதி உணர்வு ஓர் நாளில் வந்து வடுவதில்லை. அதனை ஆணைமூலம் திணிக்கவும் முடியாது. சிந்தனை, சுதந்திரம், செயல், கபடமின்மை போன்ற ஒறுதிப்பாடுகள் வலுப்படுத்துவனவாக அமையும். வன்முறைப் போக்கின் இழிநிலையிலிருநந்து விடுபடும் நிலைக்கு வழிகாட்டியாகப் போரின் கொடூரத்தைப் போக்கும் அமைதி நிலையை அடையப் பெண்கள் உறதியுடன் செயற்பட முனைவது அவசிய தேவையாகும்.

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் வன்னிக்ககான விஸ்தரிக்கப்படட் சேவை

Posted on Updated on

வன்னி மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீள் குடியேறிய குடும்பங்களையும் குறிப்பாக பாதிக்கப்பட்ட, இடம் பெயர்ந்த பெண்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகளையும் அறிந்து கொள்ளும் முகமாக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன் மற்றும்  அந்நிலையத்தின் திட்ட அலுவலர்கள் மார்ச் 18,19,20 ம் திகதிகளில் மாங்குளம் கிளிநொச்சிப் பிரதேசங்களுக்குச் சென்றிருந்தனர்.இவர்களோடு கலந்துரையாடுவதற்காக மாங்குளம், ஒலுமடு, அம்பலகாமம், புளுமஞ்சிநாதகுளம், பனிக்கம்குளம், வன்னிவளான் குளம், குஞ்சிக்குளம், கொள்ளர்குழியம் குளம், வன்னிவிளான் குளம், குஞ்சிக்குளம், கொள்ளர்குழியம்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்த யுகச்தி மகளிர் சம்மேளன அங்கத்தவர்களும் கோணாவில் பரந்தன், விவேகானந்தர் தெரு, மளையாளபுரம், சுதந்திரபுரம், ஊற்றுப்புலம், உடையார்கட்டு, கிளிநொச்சிப் பிரதேசங்கிளிலிருந்து வருகை தந்த மகா சக்தி மகளிர் சம்மேளன அங்கத்தவர்களோடும் அவர்களது பிவரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தின் மனைப் பொருளியல் வீட்டுத் திட்ட ஊக்குவிப்புச் செயற்பாட்டுக்கேற்ப மகளிர் அபிவிருத்தி நிலையம் இவ்வாறு வருகை தந்த பெண்களுக்கு 50,000.00 ரூபா பெறுமதியான வீட்டுத் தோட்டச் செய்கைக்கான மரக்கறி விதைகளை வழங்கியது.
பெண்களின் முக்கிய பிரச்சினைகளாக பாதுகாப்பான வீடு ஒன்றைப் பெற்றுக் கொள்வது எல்லோருக்கும் முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. தற்காலிகமாக வழங்கப்பட்ட வீடுகள் கதவுகள் இன்மையால் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆகவே வீட்டுத் திட்டத்திற்காக வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. வீடகளைக் கட்டி முடிப்பதற்கு சில குடும்பங்கள் நகைகளை விற்று மற்றும் கடனுதவிகளைப் பெற்று பாதுகாப்பான வீடுகளை அமைக்க முற்படுகின்றனர். இதனால் அவர்கள் தொடர்ந்தும் கடனாளிகளாக இருப்பதல் வாழ்வாதாரத்திற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மலசலகூடங்கள் கதவுகள் அற்ற நிலையிலும், கிணறுகள் கட்டுக்கள் அற்ற நிலையிலும் இருப்பதால் எந்நேரமும் அபாயத்ததை எதிர் நோக்குபவர்களாக இருக்கின்றனர். ஏ9 பாதையயை அண்டியபிரதேசங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் வீடுகளுக்கு யன்னல்கள், கதவுகள் இல்லாத காரணத்தால் வகனங்களால் கிளப்பப்படும் தூசிகளினால் இருமல், தும்மல், சளி போன்ற நோய்களால் துன்பப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பல குடும்பங்களில் உள்ளோர் பல ஏக்கர் காணிகளை போரின் முன்பு தமக்கு சொந்தமாக வைத்திருந்த போதிலும் தற்போது அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தமக்கு 1/2ஏக்கர் காணிகளே பகிர்ந்தளிக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்தனர். முன்பு பரந்தளவில் நெல், சிறுதானியங்கள், மற்றும் பண்ணை போன்றவற்றைப் பராமரித்து வந்த மக்கள் இடவசதி இன்மையால் அவற்றை மீண்டும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் காணிகளுக்குப் பாதுகாப்பான வேலிகள் எதுவும் இல்லை, வளர்ந்து வரும் பற்றைகளால் விசயந்துகளின்  தொல்லைகள் அதிகரித்துள்ளதோடு பாம்புக் கடியினால் பலர் இறந்தும் உள்ளனர். பாதுகாப்பற்ற வீகளுக்குள் மிருகங்களோ, பாம்புகளோ இலகுவில் புகுந்துவட முடியும். துப்பரவு செய்யப்படாத பற்றைகளினால் நுளம்புகள் அதிகரித்துள்ளதோடு மக்கள் டெங்கு போன்ற நோய்களுக்குள்ளாவதை அவதானிக்க முடிந்தது.
மாங்குளம் ஆதார வைத்திய சாலைக்கு மிகத் தூர இடங்களில் இருந்து செல்லும் மக்கள் அங்கு போதிய வைத்தியர்கள் இன்மையால் கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். நோயாளர்களுக்குரிய மருந்து விற்பனை நிலையங்கள் அரிதாகவே  உள்ளது. ஆயுள்வேத வைத்திய முறைகளும் இன்னும் விஸ்தரிக்கப்படவில்லை. சிறுவர்கள் போசாக்கற்றவர்களாகக் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மிகத் தூர இடங்களிலிருந்து வருவதனால் பாசாலை வரவில் வீழ்ச்சி அடைவதோடு, யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தரும் ஆசிரியர்களின் வரவிலும் விழ்ச்சி காணப்படுவதை அவதானிக் முடிந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் பேரூந்துகளில் கிளிநொச்சியிலிருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை. இதனால் ஒழுங்கான போக்குவரத்தின்மையால் குறித்த நேரத்திற்கு மாணவர்கள் காடசாலைக்குச் செல்ல முடியாதுள்ளனர். மாணவர்கள் ஏனைய பிரயாணிகளுடன் நெருக்கமாகப் பிரயாணம் செய்வதனால் மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் டிதெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் பல இம் மகளிர் சம்மேளனங்களுக்கு அடிக்கடி வருவதாகத் தெரிவித்தனர்
.

சந்தைவாய்ப்பு வசதிகளுக்காக பல மைல் தூரம் செல்ல வேண்டியிருப்பதனால் பெண்களின் பெண்களின் வியாபாரச் செயற்காடுகள் பல முடக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான  உணவைப் பெற்றுக் கொள்ளும் வசதிகள் கூட இவர்களுக்கு அங்கு காணப்படவில்லை. வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடுவதற்கு நீர் பிரச்சினையாக உள்ளது.அனேகமான  குடும்பங்களில் ஊனமுற்றவர்களும், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் தகுந்த பராமரிப்பின்றி வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிந்தது. மன அழுத்தத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு நிறுவனங்களினால் உளவள ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும் அவை போதியதாக இல்லை. ஊனமுற்றவர்களில் பலர் இன்னும் காயம் மாறாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் பராமரிப்பதிலோ,வைத்திஙசாலைக்கு எடுத்துச் செல்வதிலோ பல தடங்கல் காணப்படுகின்றது.மேலும் தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பல பெண்கள் வெளியில் செல்ல முடியாதவர்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் காணப்படுகின்றனர். இவர்கள் சமூகத்தில் உள்வாங்கப்படுவற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

அன்றும் இன்றும் என்றும் – யாழ் மண்ணில் பெண்கள்

Posted on

காலம் காலமாக போற்றிக் கடைப் பிடித்து வந்த இறுக்கமான எமது கலாசாரப் பண்பாட்டுப் படிமங்கள் உடைக்கப்பட்டு, எமது கலாச்சாரத்தை மீளுருவாக்கம் செய்யும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மாறி வரும் உலகின் விரைவான மாற்றங்களை உள்வாங்கி புதிய சமூகப் புரள்வுகளை வாழ்வின் ஆதாரங்களாகக் கொண்டு பழையவற்றிலிருந்து விடுபடுவதற்கு பெண்கள் சமூகமே பல நியாயங்களை ஏற்படுத்தியுள்ளன. பெண்கள் எமது நாட்டில் தொடர்ந்தும் அடக்கப்பட்டு சுரண்டப்படும் சமூகமாகவே இருந்து வந்துள்ளனர்.
அன்றைய பெண்கள் தமது குடுமபங்கட்குள்ளேயே தாழ்த்தப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்ததோடு  ஆண்கள் சகல மட்டத்திலும் உயர்ந்தவர்கள் என்ற கருத்தோட்டம் வாழ்வியலில் உயிர் நாடியாக விளங்கியது. கூட்டுக் குடும்ப முறையின் பின்னணியில் ஆண் கட்டுப்பாடற்ற குடும்பத் தலைவனாகவே தன்னைச் சித்தரித்துக் கொண்டான். பெண்களே சமயம், கலாசாரம், குடும்பக் கடமைகள் என்பவற்றை இறுக்கமாகப் பேணுபவர்கள் என்ற எண்ணக் கரு அன்றைய யாழ் பெண்களிடம் நிரம்பவே வேரூன்றி இருந்தது. கோவில்க் கொண்டாட்டங்கள், சடங்குகளில் பெண்களின் ஈடுபாடுகள் இவற்றை முக்கியப்படுத்தும் சான்றுகளாக அமைகின்றன.
கலாசாரத்தின் சின்னங்களாக விளங்கும் ஆடைகளின் மாற்றம் கூட நாகரிகமான கல்வியறிவு பெற்ற இல்லத்தரசிகளின் மத்தியில் புதிய பரிமாணத்தோற்றத்தைப் புகுத்தியது. பூட்டியம்மா உடுத்த உடையை அம்மம்மா உடுத்ததில்லை. அம்மம்மா உடுத்தது போல் அம்மா உடுக்கவில்லை. அம்மா போல அக்கா உடுத்ததில்லை இவற்றுள் எது என்னுடைய ஆடை? எது என் கலாசாரம்? இம் மாற்ற கலாசாரத்திற்கான தேடல் இன்று எம்முன் கேள்விக் குறியாகி முரண்பாடான வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. இவ் வாதங்களை நிலை நிறுத்துவதில் முனைப்புப் பெறுகின்ற ஒரு வாதமே பெண்ணிலை வாதாம் என்கின்ற பெண்களின் சமத்துவத்திற்கு வலுவூட்டும் கோட்பாடு எனினும் சமத்துவத்திற்கான போராட்டம் முன்னெடுக்கப்படும் போது சமூகத்தின் அடித்தளத்தில் காணப்படும் அடிப்படையான பிரச்சினைகட்கு தீர்வு எட்டப்படுவதில்லை. ஆகவே பெண்கள் முன்னேற்றத்தின் பாதைகட்கு எதிராகப் போராடுவது என்ற நிலையை  மீறி சமூக மாற்றத்தை வலுப்படுத்தல் என்ற கருத்தைக் கொண்டதாக அமைதலே ஏற்புடையதாகும்.
இலங்கையின் தமிழர் செறிந்து வாழ் பிரதேசமாக யாழ்ப்பாணப் பிரதேசம் அமைந்துள்ளது. மிக நீண்ட தமிழர் பாரம்பரியத்தைக் கொண்ட இந்து மரபுரிமையினை தமது கலாசார உரிமையாகக் கொண்டவர்கள் இந்து நாகரிகத்தின் அடித்தளத்தோடு இணைந்துள்ளது தான் இம் மரபு. இம் மரபு யாழ்ப்பாணப் பெண்களை சமூகத்தலத்தின் நாகரிகத்தின் உயாந்த நிலையிலேயே வைத்துள்ளது. நாகரிகத்தின் அளவு கோலாக சமூகத்தின் படிமுறை வளர்ச்சியைக் காட்டும் வழிகாட்டியாக கல்வி அமைந்திருந்த போதிலும், யாழ்ப்பாண அன்றைய பெண்களின் கல்வி நிலை, அல்லது அறிவு மட்டம் எந்த வகையிலும் குறைவாக மதிப்பிடப்படவில்லை. அக்காலக் கல்வி சமயம், இலக்கியம் என்ற இரு பரப்பெல்லைக்குள்ளும் பெண்களை வரையறுத்து வைத்திருந்ததென்பது உண்மையே. ஆயினும் அன்னிய நாட்டவரின் தாக்கங்களினால் பல வித சடங்குகளும், சம்பிரதாயங்களும் இடைநிலையில் சேர்க்கப்பட்டு வாழ்வியல் முறைகளில் இறுக்கமான அடக்குமுறைகள் புகுத்தப்பட்டதனால் பெண்கள் சமூக மட்த்தில் அடக்குமுறைகட்கு உள்ளாக்கப்பட்டு்ள்ளனர். ஏட்டுக் கல்வி என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் கிடையாத நிலையிலிருந்து பாரம்பரிய தொழில் ஆக்க நுட்பங்கள் சிறந் சமூக சிந்தனையாளர்களை உருவாக்கியிருந்தது. இதன் தொடர்பாக பாரம்பரிய வைத்தியம், சோதிடம் என்பன வழர்ச்சியடைந்து அக்குடும்பந்தைச் சார்ந்த பெண்களும் ஓர் சமூகத் தலைமைத்துவத்தை வழங்கியிருந்தது. வீடுகளிலும், திண்னைகளிலும் வாழந்த பெண்கள் பள்ளிக்கூடங்களிலும் கல்வியினைப் பெற்றார்களா என்பதற்கு சான்றுகள் குறைவாகவே இருந்த போதிலும் கேள்வி ஞானத்தில் அவர்கள் மேலோங்கி இருந்ததற்கான ஆதாரங்கள் சமய தலங்களில் அவர்கள் காட்டிய ஆர்வம், விருந்தோம்பல் முறைகளிலிருந்து அறிய முடிகின்றது.
பெண் கல்வியின் ஆரம்பம் மேலைத்தேச அறிவியல் வளர்ச்சியோடு ஆரம்பமாகி எமது பிரதேசத்திற்கும் புதிய பரிமாண வடிவத்தைக் கொடுத்தது. போர்த்துக் கேயரின் வருகையேர்ட ஏற்பட்ட சிந்தனைப் புரட்சியும், சிந்தனை மாற்றங்களும் பெண்களுக்கு கல்வி மற்றும் எழுத்தறிவும் அவசியம் என்பதை உணர்த்தியது. இக் கால கட்டத்தோடு ஏற்பட்ட எழுச்சியானது மரபு நிலைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையே நடைபெறப் போகும் மாற்றங்களின் சுட்டியாகக் காட்டப்பட்டது. போர்த்துக் கேயரின் வருகையோடு இடம்பெற்ற கட்டாய மதமாற்றத்தை தொடர்ந்து ஏற்பட்ட சமூக மாற்றங்கள் பெண்களை விழிப்பூட்டியது. அந்நியமான பழக்க வழக்கங்கள், மொழி, பாடசாலைகளின் நிறுவன மயப்பட்ட வருகை யாவும் யாழ்ப்பாணப் பெண்களிடையே புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெண்கள் தேவாலயங்களில் நடைபெறும் விழாக்களில் பங்குபற்றினர். சிறுமிகட்கு பாடசாலைகளில் ஆரம்ப கல்வி புகட்டப்பட்டது. பெண்களுக்குத் தேவாலயங்கிளல் மாலை நேல வகுப்புகள் நடைபெற்றன. ஆனால் பெண்களுக்கென்று தனிப்பட்ட பாடசாலைகள் நடைபெறவில்லை. இவ்வாறு ஏற்பட்ட மாற்றம் யாழ்ப்பாண சமூகத்தில் மிகப் பாரிய தாக்கத்தையும் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தியது. இப் புதிய உணர்வுகள்  “புதுமைப் பெண்” என்ற உணர்வை பெண்கள் மத்தியில் தூண்டியது. அன்னிய மொழியறிவு, புதிய நாரீக உடைகள், பணம் படைத்த நடுத்தர வர்க்க ஆண்கள் யாவையுமே பெண்கள் வாழ்வியலில்  மாற்றத்தை ஏற்படுது்தியது. புதிதாக வீட்டை விட்டு புறப்படத் துணிந்த நடுது்தர வர்க்கப் பெண்கள் தமது தேசிய அடையாளத்தையும் தேசிய கலாசாரத்தையும்  விடவில்லை. அதேபோல ஏனைய பெண்களும் அதனை விட்டுவிடக் கூடாது என விரும்பினர் . இதனால் கலாசார சீரழிவு ஒன்று அப்போ இருக்கவில்லை. கல்விக்கான சந்தர்ப்பங்கள் விரிவுபடுத்தப்பட்டதனால் பெண்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்புக்களும் ஏற்பட்டன. மத்தியதர வர்க்கத்தின்  எழுச்சி பெண்களும் மேற்குலகப் பெண்கள் போல் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்த போதிலும் யாழ்ப்பாண சமூகத்தின் ஆணாதிக்கச் சிந்தனைகள், சமூகப் பழக்கவழக்கங்களை தகர்த்தெறியும் போக்கிலிருந்து அவை நழுவி விட்டதாகவே அறிய முடிகின்றது.
ஆயினும் ஏற்பட்ட சமூக மாற்றம், பெண் கல்வி யாவும் எவ்வகையான மாற்றங்களை யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்படுத்தின என்ற விடயங்கள். பெளிப்படு்த்தப்படாத புதிராகவே உள்ளது.
தற்கால அல்லது இன்றைய பெண்கள் பற்றிய சமூக விழிப்புணர்வு ஓர் பாய்ச்சல் வேகத்தில் யாழ்ப்பாண சமூகத்தின் மரபுவழிகளை புறந்தள்ளும் போக்கை க் கொண்டதாக மாற்றமடைந்து வருகின்றது. கல்வியில் முன்னேற்றமடைந்து சாதனைகளைப் படைத்து வரும்  பெண்கள் தங்களுக்கெதிராக சமூகத்தில் நிலவும் தடைகள், ஆணாதிக்க சிந்தனைகளை எதிர்த்து போராடி வரும் பெண் விடுதலை இயக்கங்கள் சரசியல் சமூக ரீதியான மாற்று வழிகள் பெண்களுக்குத் தேவை எனக் குரல் பொடுக்கின்றனர். எது எப்படி இருந்த போதிலும் போராட்டங்களின் தாக்கங்கள் இன்றும் யாழ்ப்பாணப் பெண்களின் குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களின் நிலையில்  அதிக மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. யாழ்ப்பாணப் பெண்களின் திருமண வாழ்க்கை முறைகள் ரோமன் சட்டத்தின் அறிமுகத்தோடு சீர்படுத்தப்பட்ட போதிலும் சொத்துரிமை, சீதனம் போன்ற வழக்காற்று முறைகள் தற்போதும் பெண்களை தாக்கத்திற்குள்ளாக்குவாதாகவே உள்ளது. தந்தை வழிச் சமூக அமைப்பில் பெண் மீதான ஒடுக்கு முறை பல தளங்களில் செயற்படுகின்றது. இவை குடும்பம், மதம், கல்வி,கலை இலக்கியம் ஏன் அரசியலில் கூட தொடர்வதாகவுள்ளது. தற்காலப் பெண் தனக்குரிய ஒடுக்கு முறைளை களைய வேண்டின் அதற்கேற்ற அறிவையும் உற்பத்தி செய்து கொள் வேண்டியது இன்று மிக மிக அவசியமாகின்றது. எமது சமூகப் பிண்ணணியில் சீதனக் கொடுமை, பால் ஒடுக்குமுறை, ஆபாச எதிர்ப்பு, பொருளாதார ரீதியில் பாராபட்சம் என்பதோடு நின்று விடாது சமூகத்தின் பெண் ஒடுக்கு முறையில் ஆளமான வேர்களைத் தொட முயல வேண்டும். பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது. பாலுறவு ஒடுக்கு முறையே. போரின் கொடுமைகளோடு பாலியல் இம்சைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எம் பெண்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான சமூகப் பாதிப்பாகும். இக்ற பொருளாதார அரசியல் ரீதியில் பெண் விடுதலை பெற்றுள்ள பெண்கள் எப்போதும் விடுதலை பெற்றவர்களாக அல்லை. குடும்பமே இன்று பெண்கள் மீதான சகல ஒடுக்கு முறைகட்கும் மூலகாரணமாக இருந்து வருகின்றது. யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பில் இன்று குடும்பங்கள் சிதைந்து, சமூ உறவுகள் சிதைந்து பெண்கள், ஆண் துணையற்றவர்களாகவும், சிறுமிகள் பாதுகாப்பற்றவர்களாகவும் வாழ்கின்றனர். யாழ்ப்பாணத்தில் ஆதரவற்றவர்களாக வாழும் 40,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் தமது குடும்பங்களை தனியாகச் சுமப்பவர்களாகவே உள்ளனர். இவை மட்டுமல்ல திருமண வயதைக் கடந்தும் திருமணமாகாது தனித்து வாழும் பெண்கள் இள வயது திருமணங்கள் காரணமாகப் பிரிவுகள், பெண்களுக்கு உத்தரவாதமான தொழிலின்மை, தொழில் தருவதாக ஏமாற்றிக் கூட்டிச் செல்லும் முகவர்கள் இப்படியாக நீண்டு கொண்டே செல்லும் பெண்களின் அவலத்தை எமது குடும்ப முறைமைகளைச் சிதைத்துள்ளனர். இன்று சமூக வரையறைக்குள் நின்று சமூகப் பிரச்சினைகளைத் துருவி ஆராயும் போது பெண்கள் விடுதலையும், சமூகப் பிரச்சினைகளும் ஒன்றாகவே தெரிகின்றன. ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் பெண்களுக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும். குடும்பத்தின் அடக்குமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். வீடடைப் பாதுகாத்தல், அன்பு செய்தல், திருமணம், குழந்தை பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சியானவை என சிறுவயது முதல் கற்பிபக்கப்பட்டு வந்துள்ளது. ஆ யினும் இவற்றையெல்லாம் பெண்கள் மகிழ்வானதாகக் கொள்வதில்லை. சகல மட்டத்திலும் விடுதலை என்பது அறிவு  பூர்வமான சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதனை எப்படிப் பெண்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் தற்போது பிரச்சினை. விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பலர் குதித்தாலும் பெண்கள் நிலை உயரவில்லை. ஆண்கள் அதிகாரமே மேலேங்கி நிற்கின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறுபவர்களில் 62% மானவர்கள் பெண்கள். இவர்களால் எமது சமூகத்தின் மாற்றங்களை எட்டிப் பிடிக்க முடிந்ததா? பெண்கள் சமூகத்தைத் தட்டியெழுப்பக் கூடிய வகையில் சிந்திக்க வேண்டும். சொந்த மண்ணில் பெண்கள் வாழ்வு மலர நாம் நிச்சயமாக விடுபட்ட வாழ்வுக் கலாசாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப விரைவோம்.