Day: July 11, 2012
Exhibition
This exhibition was conducted by the Centre for Women and Development and Women entrepreneurs exhibited this event in Saraswathi Hall, Jaffna.
The focus of this event is to identify the best marketing avenues for the local products such as hand woven product using Palmyra leaves and products made by women.
The program was very successful. We are planing to conduct such programs in an yearly manner in the future.
Advertisements
School Programs
ஒழுங்கான சமுதாயத்தின் வழிகாட்டிகள் மாணவர்கர்களே
இளம் சமுதாயத்தினர் சரியாக வழிநடத்தப்படவில்லை துன்பங்கள், தொல்லைகள் நிறைந்த சமுதாயமாக எமது சமுதாயம் மாறி வருகின்றது. இப்படியெல்லாம் குற்றச் சாட்டுக்கள் பல கோணங்களிலும் வந்து சேர்கின்றன. இதற்கெல்லாம் மாயவர்கள் தான் காரணம் என்பது முடிவல்ல. எது எப்படி இருந்த போதிலும் பருவத்தின் தேவைகள் பாலியல் சேஸ்டைகளாக உருவெடுத்து அதன் விளைவாக ப் பாதிக்கப்படும் இளம் பெண்களின் நிலை இன்று எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கான ஓர் வழிகாட்டலை எங்கே தொடங்கலாம் மாணவர்களின் எதிர்கால உயர் நோக்கை மையமாகக் கொண்டு பெண்கள் கூடுதலாகக் கல்வி பயிலும் பாடசாலைகளிலும், ஏனைய பாடசாலை மாணவ, மாணவியர்களை இணைத்தும் சில விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்துவது பயனுள்ளதாக அமையும். இவ்வாறான கருத்தரங்குகளை மகளிர் அபிவிருத்தி நிலையம் நடத்தி வருகின்றது.
இதன் மூலம்
ஆகியன மாணவர்கள் மத்தியில் வலுப்படுத்தப்படும் இது போன்ற கருத்தரங்குகள் மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோர்களுக்கும், கிராமிய மட்டத்திலும், இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலும், நகர்புற மக்கள் மத்தியிலும் நாம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இச் செயற்பாட்டினை வட மாகானத்திலுள்ள கல்வி வலையங்களை உள்ளடக்கும் 104 பாடசாலைகளுக்கு நடத்துவதென தீர்மானித்துள்ளோம். இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவிலுள்ள பாடசாலைகளும் அடங்கும் . இக் கருத்தரங்கிற்கு அதெரிவு செய்யும் மாணவர்கள் தரம் 10ற்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களாவர். இது வரை பி்ன்வரும் பாடசாலைகளில் இக்கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன.
ஆகிய 6 பாடசாலைகளில் 2000 மாணவர்களுக்கு இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 10 பேர் கொண்ட குழு தெரிவு செய்யப்பட்டு்ள்ளது. இக்குழுவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.
இப் பாடசாலைகளில் கருத்தரங்கு நடத்துவதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளனர். பெற்றோர்களும் இக் கருத்தரங்கிற்கு முழு ஆதரவை வழங்குகின்றனர். இக் கருத்தரங்கு மாணவர்களுக்காக சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது. வளவாளர்களில் மகப்பேற்று நிபுணர்கள், ஊடகவியலாளரகள், சட்டத்தரணிகள் பங்குபற்றி மாணவர்களை நல்ல முறையில் வழிகாட்டுகின்றனார். இவ்வாறான கருத்தரங்குகள் எமது சமுதாயத்தின் இளைஞர்களை நல்வழி்ப்படுத்தி சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் என நம்புகின்றோம். இததற்கு உங்கள் எல்லோரது ஒத்துழைப்பும் கிடைக்கும் என்பது எமது நம்பிக்கை
தொடர்ந்தும் பாடசாலைகளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.