International women’s Day -2014 – Invitation

Posted on Updated on

புதுக்குடியிருப்பில் நான்கு வருடங்களின் பின் முதன்முதலாக கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினம்-2014
போரினால் பாதிப்புற்ற வன்னிப் பிரதேசம். அப்பிரதேச வாழ் மக்கள் அவர்களோடு மகளிர் அபிவிருத்தி நிலையம் பல பணிகளில் ஈடுபட்டுவரும் அதே நேரத்தில் 2014.மார்ச்.2014 அன்று சர்வதேச மகளிர் தினத்தை புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் மண்டபத்தில் நடத்தி எல்லோரதும் பாராட்டையும் பெற்றுள்ளது. போர் முடிவடைந்து நான்கு வருடங்களின் பின் தமது பிரதேசத்தில் மகளிர் தினம் கொண்டாடப்படுவதையிட்டு அப்பிரதேச வாழ் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிகழ்வு மகளிர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திருமதி. சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பெண்கள் மற்றும் மகளிர் குழுக்களின் தலைவிகள் உட்பட 250ற்கு மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு தங்களுக்காகவே நடாத்தப்படுகின்றது என்ற நிலையில் மிகவும் உற்சாகமாக இந்நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டினர்.
பெண்கள் ஒவ்வொருவரும் தம்மில் புதைந்திருந்த சோகங்களை வெளிக்காட்டாது நிகழ்வில் கலகலப்பாக கலந்து கொண்டமை நிகழ்வை சிறப்படைய வைத்தது. மகளிர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் திருமதி.மேரிகமலா குணசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் சார்பாக நிர்வாக உத்தியோகத்தர் திரு.எஸ்.சிவதாஸ் , முஃகைவேலிகணேச வித்தியாலய அதிபர் திருமதி. சிவராணி தங்கமயில் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி. குகணேசதாசன் சரோஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இத்துடன் இந்நிகழ்வில் தென்னிலங்கையில்; இருந்து வருகை தந்திருந்த அன்னையரும் புதல்வியரும் நிறுவனம் சார்பாக திருமதி. டல்சி ,திருமதி.தயா அவர்களும் கலந்துகொண்டார்.
மகளிர் தின நிகழ்வு வரவேற்பு நடனத்தோடு ஆரம்பமாகி பிரதான பேச்சாளர்களின் கருத்துரைகளோடு பங்குபற்றியவர்களின் தேவைகள் கருத்துக்கள் என்பனவும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வின் இறுதியில் ‘போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்’ என்ற தலைப்பில் ஆறு அம்சங்கள் அடங்கிய மகஜர் ஒன்று வடமாகாண சபை முல்லைத்தீவுமாவட்ட உறுப்பினர் திருமதி. மேரிகமலா , புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. இத்துடன் பங்குபற்றிய பெண்களில் பத்துப் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 5000ஃஸ்ரீ படி வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. பங்குபற்றியவர்களின் கலை நிகழ்வுகளோடு மகளிர் தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
 
Advertisements

DETAILS OF WOMEN HEADED HOUSEHOLDS

Posted on Updated on

DETAILS OF WOMEN HEADED HOUSEHOLDS IN THE NORTHERN PROVINCE – 2013


No
District
WHH families
1
Jaffna
29,378
2
Mullaithivu
6294
3
Kilinochchi
6170
4
Mannar
6888
5
Vavuniya
5802
Total
54,532
Jaffna District
 
 Division
 WHH families
Delft
 250
 Velanai
 1289
 kayts
 626
Karainagar
834
Jaffna
2223
Nallur
2351
Chandilipay
1773
Chankanai
3246
Thellipalai
1855
Uduvil
2024
Chavakachcheri
3089
Pointpedro
2522
Karaveddy
2667
Kopay
3864
Maruthankerney
765
Total
29378
Killinochchi
 
 Division
WHH families
Palai
700
Poonagari
1128
Karaichi
3476
Kandavalai
1374
Total
6678
 
 
 
 
 
 
 
 
 
 
 
Vavuniya District                                                                                                                                                                                                                                                                                                                                                                    
 Division
WHH families
 Vavuniya Town
 4735
 Vavuniya South
 117
 Vengalachetykulam
 696
 Vavuniya North
 254
 Total
 5802
  
Mullaitivu District
 Division
WHH families
 Karaithuraipattu
1528
 Puthukudiyirupu
1756
 Oddisuddan
1051
 Thunukkai
860
 Manthai East
591
 Welioya
508
 Total
6294
Mannar District
 
Division
WHH families
 Mannar Town
 3137
 Nanadan
 1235
 Musali
 881
 Madu
 514
 Manthai West
 1121
 Total
 6888

Posted on Updated on

இன ஒற்றுமைக்கான யாழ்ப்பாண விஐயம்

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையில் மகளிர் அபிவிருத்தி நிலையம் செயற்படுத்தும் திட்டமாக சமூக மட்டத்தில் பல்லின மக்களிடையே சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கான களவிஐயமாக மன்னார் மாவட்டத்திலிருந்து RPR நிறுவன பிரதிநிதிகளும் கம்பகா மாவட்டத்திலிருந்து OWCURD நிறுவனப்பிரதிநிதிகளும் தேசிய சமாதானப் பேரவை பிரதிநதிகளும் வருகை தந்திருந்தனா். இவர்கள் குரும்பசிட்டி மீள்குடியேற்ற பகுதி, கோப்பாய் நலன்புரி நிலையம், வேலணை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டனா். சுழிபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் கலை நிகழ்வு ஒன்றும் நடாத்தப்பட்டது.

Posted on Updated on

பற்றிக் பிறின்டிங் பயிற்சி

மகளிர் அபிவிருத்தி நிலையம் வேலணை பிரதேச செயலகத்திற்குட்ட இளம் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கும் நோக்கத்திற்காக வருடந்தோறும் இத்திட்டத்தை செய்து வருகின்றது.

Posted on Updated on

மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கருத்தரங்குகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தின் கீழ் மகளிர் அபிவிருத்தி நிலையம் கிராம மட்ட பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன்

  • வன்முறையற்ற தொடர்பாடல்
  • சமூகத்திற்கும் சமூக அமைப்புகளுக்கும் இடையேயான உறவினை மீள்கட்டியெழுப்புதல்
  • பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சட்ட ஆலோனைகள்
  • பெண்களின் சமாதானம்,பாதுகாப்பு சம்பந்தமான UNSCR 1325 தீா்மானம்
  • போருக்கு பின் சமாதானத்தை கட்டியொழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு  போன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

.

International children day 2012

Posted on Updated on

சா்வதேச சிறுவா் தினம் 2012
சா்வதேச சிறுவா் தினத்தன்று சங்கானை, சண்டிலிப்பாய், உடுவில், தெல்லிப்பளை ,யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு புத்தகபை, கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டதோடு எமது பணிப்பாளா் சறோஐா சிவசந்திரனால் எழுதிய”சிறுவா் உரிமைகள்” எனும் கைநூல் மக்கள்வங்கி பிராந்திய முகாமையாளா் திரு .எஸ்.பத்மநாதன் அவா்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தேசிய பிரச்சினையாக வளர்ந்துவரும் வன்புணர்வு சம்பவங்கள்

Posted on Updated on

இரண்டாயிரமாம் ஆண்டின்அபிவிருத்தி இலக்குகள் நிறைவடையூம் 2015ஆம் ஆண்டளவில் சுகாதாரமட்டத்தில் மேலதிகமுன்னேற்றத்தை அடைவதற்காக பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் காலகட்டத்தில் எமது நாட்டில் கருக்கலைப்புஇ இளவயது கர்ப்பம்இ சிறுவர் துஷ்பிரயோகம்இ பெண்கள் வன்புனர்வூ என நடைபெறும் சம்பவங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரதொவித்திருப்பதுபோல இதிலாவதுமுதலிடத்தைபெற்றுவிடமுயற்சிக்கிறௌமோஎனஎண்ணத்தோன்றுகின்றது. ஐ.நா பாதுகாப்புசபையின் 1325 தீர்மானத்தின் பிரகாரம் போர்நடக்கும் காலங்களிலும் போர் நடைபெற்று முடிந்த பின்னய காலகட்டங்களிலும் பெண்கள்இ சிறுவHகளுக்கு தகுந்த பாதுகாப்பளித்தல் வேண்டும் என்று பாpந்துரைத்துள்ளது. இப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அப்பால் போH நடந்து முடிந்த பிரதேசங்களில் பெண்களுக்கும் சிறுவHகளுக்கும் இப்பாதுகாப்பு சாpயாக கிடைக்கவில்லை என்பதற்கு நாளாந்தம் இடம் பெற்று வரும் துஷ்பிரயோக சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றது. சுமாH 20இ000 சிறுவH துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாக தரவூகள் காட்டுகின்றன. சிறுவH துஷ்பிரயோகம்இபெண்கள் வன்புணHவூஎன்பனசாதாரணநிகழ்வூகளாகஎமதுசமூகத்தில் பேசப்பட்டுவருவதுதுன்பகரமானதே. சிறுவHஅபிவிருத்திமற்றும் மகளிர்விவகாரஅமைச்சர்திஸ்ஸ கரலியத்ததொலைக்காட்சி நாடகங்களின் தாக்கத்தை காரணமாக காட்டியூள்ளார். ஆயினும் பெண்கள் தான் தொலைக்காட்சி நாடகங்களை தொடர்ந்து பார்க்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு அப்பால் இந்த நாடகங்களை பார்க்காத ஆண்கள் இதனால் எப்படி பாதிக்கப்படுகின்றார்கள் என்ற ஒர் கேள்வியூம் எழுவது நியாயமானதே. சம்பவங்களுக்கு காரணங்களை தேடி அலையாது சம்பவங்களுக்கு காரணமானவர்கட்கு சாpயான தண்டனைகளை துhpதப்படுத்துவதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள் தொpவித்திருப்பதுபோலசட்டங்களஇ; தண்டனைகள்கடினமாக்கப்படவேண்டும் என்பது வரவேற்கத்தக்கதே. அதற்கானநடவடிக்கைகளைமகளிh; அமைச்சுஆரம்பித்திருப்பதும் வரவேற்கத்தக்கதே. மகளிர்; அமைப்புக்களின்நடவடிக்கைகள் பாலியல் வன்முறைகெதிரான குழுஇ மகளிh;க்கான உளவள ஆலோசனைகள் யாவூமே பெண்களை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுவதன் காரணத்தினால்இ ஆண்கள் இவை எல்லாமே தமக்கு எதிரானவை நாம் நாமாகவே இருப்போம் என்ற இறுமாப்பில் காhpயங்களை நகா;த்துகின்றனா;. பெண்கள் இன்று வல்லமை பொருந்திய ஆளுமையூடையவா;களாக தம்மை பாதுகாக்கும் தைரியமுடையவா;களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்இ அவா;களை இலகுவாக தம்வசப்படுத்தமுடியாத நிலையில் இன்று அப்பாவி பெண்கள்இபால்குடி மாறாத 3வயதுஇ4வயது குழந்தைகளை தமது காமப்பசிக்கு இலக்காக்கும் காமுகா;களை எமது சமூகம் உள்வாங்கியிருக்கின்றதே!அதற்கு நாம் என்ன பதில் கூறப்போகின்றௌம்.கொழும்புத்துறையில் மிக அண்மையில் நான்கு வயதே நிரம்பிய சிறுமியை 40 வயது காமுகன் வன்புணா;விற்கு உட்படுத்தியது பெண்களைப் பெற்ற தாயூள்ளங்களை கொதிப்படைய செய்துள்ளது. அரசியல்வாதிகளோ இன்றுபடையணிகள் பின்தொடர உச்ச பாதுகாப்பில் வலம்வருகின்றனா;.ஆனால் புள்ளியிட்டுஅவா;களைஅhpயாசனத்திற்குஏற்றியபெண்கள் தமதுகுடும்பத்தில் சிறுமியரையூம் தம்மையூம் பாதுகாக்க முடியாது தத்தளிக்கின்றனா;. ஓh; சமூகத்தில் பெண்களும் சிறுவரும் ஆரோக்கியமாக வாழும்போதே சமூகம் பூரணப்படுத்தப்பட்ட சமூகம் என நாம் கூறமுடியூம்.

போhpன் பின்னரானமீள்குடியேற்றம் நல்லிணக்கம் என்பனபெண்களையூம் சிறுவரையூம் ஒன்றிணைத்த செயலாக்கமாகவேஅமையவேண்டும். பாதுகாப்பற்ற ஓh; சமூக அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதில் மீண்டும் மீண்டும் பல பிரச்சிரனைகளை உள்வாங்க வேண்டிய சந்தா;ப்பங்களே அதிகம். பத்திhpகைகளில் வெளிவரும் பாலியல் வன்புணா;வூ குற்றங்களை தினமும் பாh;க்கும் போது இவை செய்திகளாக மட்டும் பாh;க்காது ஒவ்வொரு பெற்றௌரும் தமது பிள்ளைகள் பற்றி அச்சம் கொள்ள வேண்டிய நிலையே ஏற்படுகின்றது. பெண்பிள்ளைகட்கு பெற்றௌரே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையில் அவா;களது ஏனைய செயற்பாடுகள் கேள்விக் குறியாகஇ பெண்பிள்ளைகள் தனித்து வீட்டில் கூட விட்டு விட்டு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் குற்றங்கட்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்பதற்கு அப்பால் குற்றச் செயல்களை விரைவாக ஆராய்ந்து அதற்குhpய நீதியான தண்டனை வழங்கினாலே பெரும்பாலான குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு காவல் நிலையங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்பொலிஸ் பிhpவினா; கூட உசாh;படுத்தப்பட்ட நிலையில் அவா;களுக்கு உடனுக்குடன் சென்று விசாhpக்கக் கூடிய வகையில் போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை சாpயாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாலியல் குற்றங்களில் ஓரளவாவது குறைப்பதற்கு முடியூம். பெண்கள் சமூகத்தில் தம்மை ஆளுமை மிக்கவா;களாகவூம்இ தன்னம்பிக்கை மிக்கவா;களாகவூம் உருவாக்கிக் கொள்வதன் மூலம் தம்மையூம்இ தமது சந்ததியினரையூம் இவ்வாறான துன்பகரமான சம்பங்கள் இடம்பெறாமல் காப்பாற்ற முடியூம.; சமூகம் சீரழிகின்றது என்று கூறும் போது சமூகத்தில் நாமும் ஒருவா; என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.